8 Dec 2011

ஜிகாபைட்டின் டி1132என் புக்டாப்


Gigabyte Booktop T1132N
மேசைக் கணினியாக இருந்தாலும் சரி, லேப்டாப்பாக இருந்தாலும் சரி அவற்றுக்கென்று தனித்துவமும் தன சிறப்பம்சங்களும் உள்ளன. மேசைக் கணினியில் இணைப்பு வசதி பக்கவாக இருக்கும். லேப்டாப் மிக எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும்.
தற்போது இவற்றை விஞ்சும் வகையில் டேப்லெட் என்று கூறப்படும் கையடக்க கணினிகளும் மார்க்கெட்டிற்கு வருகின்றன. அவற்றின் செயல் திறனும் சூப்பராக இருக்கிறது.

ஜிகாபைட் கம்யூட்டர்ஸ் நிறுவனம் புதிய டிவைஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த டிவைஸ் கணினி, லேப்டாப் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள வசதிகளை ஒருங்கே  கொண்டிருக்கும் சாதனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புக்டாப் டி-1132என் என்று அழைக்கப்படுகின்ற இந்த புதிய மினி லேப்டாப் ஒரு புதிய படைப்பாக வருகிறது. இந்த புக்டாப் 4 மாடல்களில் வருகிறது.
ஜிகாபைட்டின் டி1132என் புக்டாப் ஒரு உறுதியான சேஸிஸ் கொண்டுள்ளது. இந்த புக்டாப் கருப்பு மற்றும் வெள்ளை என 2 நிறங்களில் வருகிறது. இதன் மொத்த பரப்பு  290 மிமீ x 220.7 மிமீ x 27.86 மிமீ ஆகும். இதன் எடை 1.7 கிலோவாகும். இது பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கிறது. இதில் 90 சதவீதம் அளவிற்கு கீபோர்டும் மற்றும் 10 சதவீதம் அளவிற்கு டிராக் போர்டும் உள்ளது.

இந்த புக்டாப் 2ஜி இன்டல் ஐ5-2467 எம் பிராசஸரைக் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸரின் கடிகார வேகம் 1.66ஜி ஹெர்ட்ஸ். இதன் பூஸ்டிங் 2.3ஜி ஹெர்ட்ஸ் ஆகும். இதன் திரை கெப்பாசிட்டிவ் எல்இடி பேக்லிட் மற்றும் மல்டி டச் வசதி கொண்டது.

இதில் டிடிஆரின் 2ஜிபி ரேம் அல்லது 4ஜிபி ரேமை பொருத்திக் கொள்ளலாம். இந்த புக்டாப்பின் மொத்த சேமிப்பு வசதி 8ஜிபி ஆகும்.  இது இன்டல் எச்எம்65 எக்ஸ்பிரஸ் சிப்செட்டைக் கொண்டுள்ளது.

இந்த புக்டாப்பில் 3 ஹார்டு டிஸ்க் வசதி உள்ளது. வாடிக்கையாளர் தங்களது தேவைக்கேற்ப 320ஜிபி, 500ஜிபி மற்றும் 750ஜிபி ஆகிய சேமிப்பு திறன் கொண்ட மாடல்களில் ஒன்றை தேர்ந்து கொள்ளலாம். மேலும் இதில் இன்டல் எச்டி கிராபிக்ஸ் 3000 பிராசஸரும் உள்ளது.

என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிடி 520எம் கிராபிக்ஸ் கார்டும் உள்ளது. இந்த கிராபிக்ஸ் கார்டு என்விடியா ஆப்டிமஸ் தொழில் நுட்பத்தை சப்போர்ட் செய்யும். இதன் கிராபிக்ஸ் மெமரி 1ஜிபி ஆகும்.

இந்த புக்டாப் இன்டக்ரேட்டட் ஸ்பீக்கர்களுடன் 2 ஊஃபர்களையும் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 1.3 மெகா பிக்ஸல் வெப் கேமரா மூலம் வீடியோ கால் செய்வது மிக எளிதாக இருக்கும்.

யுஎஸ்பி போர்ட் 2.0 மற்றும் 3.0 மற்றும் எச்டிஎம்ஐ அவுட்போர்ட் ஆகியவையும் இந்த புக்டாப்பை அலங்கரிக்கின்றன. இந்த புக்டாப் 6 செல் லித்தியம்-ஐயன் பேட்டரியைக் கொண்டிருப்பதால் இதன் மின் திறனும் மிக பக்காவாக இருக்கும்.

ஜிகாபைட் டி1132என் புக்டாப்பின் விலை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதன் விலை அதிகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


-- 
Regards,

Zainul Hussain
Kuwait Oil Company

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.