9 Dec 2011

முதல் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்டது என்ன?!


 
நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள்நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர்இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
கிரேய்க் நீல்சன் என்பவர் விண்வெளி பற்றி 'ராக்கெட் மேன்என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளார்அந்த புத்தகத்தில் மனிதனின் நிலவுப் பயணத்தில் மறைக்கப்பட்ட சில விஷயங்களையும்மறக்க முடியாத சம்பவமாக விண்வெளி வீரர்கள் கூறியதையும் தொகுத்துக் கூறி உள்ளார்.
41 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் கால்பதித்தான்அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்டிராங்ஆல்ட்ரின்காலின்ஸ் ஆகிய விண்வெளி வீரர்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ந்தேதி நிலவில் இறங்கினார்கள்பரபரப்பாக பேசப்படும் 'ராக்கெட் மேன்' புத்தகத்தில்சுவாரசியமான விஷயங்கள் இதோ...
திட்டமிட்டபடி இறங்காத விண்கலம்
1. விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டதுஇதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல்போனது. 31/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.
2. அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை.
3. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்ததுஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்ததுஅதேபோல் சிறுநீர் கழிப்பதுமலஜலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்ததுஇதனால் மலஜலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.  
4. அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள்ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது.
5. நீல் ஆம்ஸ்டிராங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும்போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல சென்றது.  
6. நிலவில் காலடி வைத்ததை 'மனிதனின் சிறிய அடிஎன்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் அதுசிறிய அடியாக இருக்கவில்லைஅவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார். 
7. ஆம்ஸ்டிராங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார்அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார்ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.
கொடியை நடுவதில் சிரமம்
8. நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப்படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டதுஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்ததுமனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்ததுஇதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.  
9. நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்ததுஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது. 
10. விண்வெளி ஆடைஅங்குள்ள சூழலுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் சிப் அனைத்தும் "லிட்டில் ஓல்டு லேடிஸ்'' என அழைக்கப்படும் குழுவினரால் கையால் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த விஷயங்கள் அனைத்தையும் நாசாவின் கருவூலத்தில் இருந்து சேகரித்து தொகுத்து உள்ளார்.
நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள்நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர்இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.
இதனால் தங்களின் நினைவுச் சின்னங்களாக சில பொருட்கள்ஓவியங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டே விண்வெளி வீரர்கள் பயணத்தை தொடங்கினர்இந்த விஷயங்கள் ஏற்கனவே விண்வெளி வீரர்களால் வெளிப்படுத்தப்பட்டு பல நூல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.