9 Dec 2011

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.
இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?
பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.
வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும். 250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது. ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள் ளது. இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன. இதனால், எலும்பு முறிவு ஏற் பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படு கின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.
நன்றி-தினமலர்

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.