9 Dec 2011

இணையப் பக்க அச்சில் உங்கள் பெயர்


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இணைய தளங்களில் பிரவுஸ் செய்திடும் பக்கங்களை அப்படியே அச்சுக்கு அனுப்புகிறீர்களா! அப்படியானால் அதில் உங்கள் பெயர், நீங்கள் விரும்பும் தலைப்பு ஆகியவற்றையும் அச்சிடலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே சில விஷயங்களைத் தலைப்பில் அச்சிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஹெடரில் பக்கத்தின் தலைப்பு மற்றும் பக்க எண் / மொத்த பக்க எண் ஆகியவை அச்சிடப்படும். புட்டரில் இணைய தள முகவரி மற்றும் சுருக்கமாக தேதியும் அச்சிடப்படும். இது போல மாறா நிலையில் உள்ளதை மாற்றி நாம் நம் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்தலாம். ஏனென்றால் நாம் அதிக பக்கங்களை அச்சிடுவதாக இருந்தால் கூடுதலான சில தகவல்களை அவற்றில் சேர்க்க விரும்பலாம். எடுத்துக் காட்டாக நெட்வொர்க் பிரிண்டர் என்றால் உங்களுக்கான பக்கங்களில் உங்கள் பெயர் இணைக்க விரும்பலாம். அப்போதுதான் மற்றவர்களும் அச்சுக் கொடுக்கும் வேளையில் உங்கள் பக்கங்களைத் தனியே பிரித்து எடுக்க வசதியாக இருக்கும்.
இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செட் செய்திடவும்.
1. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் செல்லவும். மெனு பாரில் பைல் மற்றும் பேஜ் செட் அப் என இதனைப் பெறலாம். கமாண்ட் பார் கிடைத்தால், பிரிண்டர் பட்டனை அழுத்தி அதில் பேஜ் செட் அப் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டும் கிடைக்கவில்லை என்றால், Alt+F  அழுத்திப் பின் க் அழுத்தவும்.
2. பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸ் உங்களுக்கு இப்போது கிடைக்கும். இதில் ஹெடர்ஸ் அன்ட் புட்டர்ஸ் என்ற பிரிவில் இரண்டு பிரிவுகள் இருப்பதைக் காணலாம். அவை ஹெடர் மற்றும் புட்டர். இவை ஒவ்வொன்றிலும் முதலில் விரிக்கையில் இடது பக்கம் என்ன டெக்ஸ்ட் அச்சாகும் என்பது காட்டப்படும். இரண்டாவதாக விரிக்கையில் நடுவில் அச்சாவதும், மூன்றாவதாக விரிக்கையில் வலது பக்கம் அச்சாவதும் காட்டப்படும். இவற்றில் நாம் தேர்ந்தெடுக்க ஆப்ஷன்களாகக் கீழ்க்கண்டவை காட்டப்படும்
.
Title
* URL
* Page number
* Page # of total pages
* Total Pages
* Date in short format
* Date in long format
* Time
* Time in 24hr format
* Custom
இவற்றில் நீங்கள் “Custom” என்பதைத் தேர்ந்தெடுத்தால், இதில் அச்சாக விரும்பும் எந்த டெக்ஸ்ட்டையும் இதில் தரலாம். இதில் உங்கள் பெயர் அல்லது முகவரியையும் இணைக்கலாம். Customஹெடர் மற்றும் புட்டரில் பக்க தலைப்பு, தேதி, நேரம் போன்றவற்றையும் கீழ்க்காணும் வழிகளில் இணைக்கலாம்.
&w: Title
&u: URL
&p: Page number
Page &p of &P: Page number of total pages
&P: Total Pages
&d: Date in short format
&D: Date in long format
&t: Time
&T: Time in 24hr format
&&: Single ampersand
எடுத்துக் காட்டாக “முருகேசன் -தீ” என டைப் செய்தால் முருகேசன் என அச்சிடப்பட்டு அதன்பின் அந்த பக்கத் தலைப்பு அச்சாகும்.
இந்த டயலாக் பாக்ஸில் தேவைப்பட்டவை எல்லாம் மாற்றிவிட்டு பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடிவிடவும்.

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.