21 Nov 2011

உலக அதிசயம் - மனித மூளை!


 
சுஜாதா
(அற்புதமான கட்டுரை)
மூளையின் முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருக்கின்றன.
ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம்உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்குகுதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம்ஆனால்அதன் மூளை கனம் நம்மில் பாதியானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான்.ஆனால்அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5சதவிகிதம்யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.]
ஒரு விமர்சனம் - ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.
குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,
நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,
ஊசிக்காதில் நூலைச் செருகுவது,
கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,
உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,
"தலைவர் அவர்களே! தாய்மார்களே!" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,
"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை!
ஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.
40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.
உடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்?
ஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் "இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்" என்றார். "மூளை - சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி." என்றார்.
இன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.
அண்மையில் 
PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது - பார்க்கும்போது - படிக்கும்போது -நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்!
உலகிலேயே மிக மிக ஆச்சரியம் - மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும்! இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை! மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.
இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.
இந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.
சராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்) அளவு? அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி).
ஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் - ஆண்களோடு ஒப்பிடும்போது).
ஆனால், சைசுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்!). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு - ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது!
தனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைசுக்கும் பாடி சைசுக்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.
ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.
மூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு 'ஸாரி' என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும்! அதுபோல் முள்ளம் பன்றி 'நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல!' என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்! ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.
எனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல்! நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்!
நம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது!
கொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...
மிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.
ஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) 2000 கிராம்.
சராசரி மனிதன் 1349 கிராம்.
அனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்) 1017 கிராம்.
மைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் 300 கிராம்.
பாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி 'டாப்' பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி!
மூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.
முன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு - கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.
பின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.
முதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப் பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.
இந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை - ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.
இந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு! ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்!
சிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..!
முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.
இன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்!
இந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூல்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு. நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.
தாமஸ் ஆல்வா எடிஸன், ''உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது'' என்றார்.
எடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.
நியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.
குழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடும்.
புத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.
வலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.
ரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967-ல் செய்த பரிசோதனைகள், நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன. இந்த 'கார்ப்பஸ் கலாஸ்ஸிம்' இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது' என்று நிரூபித்தன.
source: ''உலகிலேயே அதிசயமானது மனித மூளை!''http://tamilnenjamhifs.blogspot.com

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்..!


உங்க குழந்தை சரியா சாப்பிடறாங்களா!


*உங்க செல்ல குழந்தையை எப்படி பாத்துகறிங்க.நீங்க எங்கேயாவது வெளியில் கிளம்பும் போதும் சரி வேலைக்கு செல்லும் போதும் சரி குழந்தைகளுக்கு அவசர அவசரமாக சாப்பாடு ஊட்ட கூடாது.
*உங்க குழந்தைக்கு அஜீரணம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது பெற்றோரின் கடமை தானே.நீங்க செய்ய வேண்டியது
குழந்தைகள் அவசர அவசரமாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.
*குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப் படுத்தாதீர்கள்.காரம் மிகுந்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.குழந்தைகளை சுத்தம் சுகாதாரம் இல்லாத இடங்களில் சாப்பிட அமர்தாதீர்கள்
குழந்தைகளுக்கு தினமும் சரியான நேரத்தில் சாப்பாடு கொடுங்கள்
*நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது என்பதை உணருங்கள்.
நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள்.
*குழந்தைகள் தினமும் நான்கு அல்லது ஐந்து தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
குழந்தைகளுக்கான உணவு
*குழந்தைகளுக்கான சாப்பாடு விஷயத்தில்  நிறைய சந்தேகங்கள் நிலவி வருகிறது.சில தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு எந்த மாதிரியான உணவு தரவேண்டும் என்பதில் பல குழப்பங்கள் ஏற்படுகிறது.பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான்.
*எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
*மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றிருந்தாலும் சிலநேரங்களில் மருத்துவரின் ஆலோசனை போதுமானதாக இருப்பதில்லை.
சிலர் “கொஞ்சமாக உணவு கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள்.
*’கொஞ்சமாக’ என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
*ஒவ்வொரு குழந்தைக்கும் சத்தான உணவு என்பது மிக அவசியம்.குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல்.குழந்தைகளுக்கு பிறந்த தினத்தில் இருந்து சத்தா உணவு கொடுத்தல் எனபது மிக அவசியம்….உணவு கொடுக்கும் போது அக்கறையுடன் செலுத்துதல் மிக அவசியமான ஒன்று.
*குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி  மருத்துவர் உதவியோடு இங்கு விளக்குகிறேன்
*6மாதம் வரை குழந்தைகளுக்கு தாய் பால் போதுமானது.நீங்கள் குழந்தைக்கு தாய்பால் போதுமானது அல்ல என்று நினைத்தால் மருத்துவரிட் சென்று ஆசோசனை பெற்று கொள்ளலாம்
*பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.
*நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும்.
*பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
*குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும்.
*இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
*வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம்.
*குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
பழவகைகள்
*ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
*வாழைப்பழம் – ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
*பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
*பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
*சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation  க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்

சிசேரியனுக்குப் பிறகு கடைபிடிக்கவேண்டியவை?


*தாயின் உடல் நிலையைப் பொறுத்து நான்கிலிருந்து ஆறு நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டும். மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பியதும் மெல்ல உங்கள் வழக்கமான எளிய பணிகளைத் தொடக்கலாம்.
*சிசேரியன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே உங்களுடைய எல்லா வேலைகளையுமே செய்ய இயலும்.
*ஆபரேஷன் முடிந்து ஓரிரு நாட்களில், நீங்கள் சாதாரண உணவை உட்கொள்ளலாம். சிசேரியனுக்கு உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது. சமச்சீரான உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது. உணவில் புரதச்சத்து கொஞ்சம் அதிகம் இருக்கட்டும்.
*நெய் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைத் தவிர்க்கவும். காரணம், கர்ப்ப காலத்தின்போது உடல் எடை கூடியிருக்கும். அதைக் குறைப்பதற்கு இந்தக் கொழுப்பு உணவுகள் எந்தவகையிலும் உதவாது.
*ஆறு வாரங்களுக்கு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதைத் தவிர்க்கவும். அதே போல் தாம்பத்திய உறவையும் ஆறு வாரங்களுக்குத் தவிர்த்து விடுங்கள்.
*நான்கிலிருந்து ஆறுவாரங்களுக்குப் பிறகு, அடிவயிற்றுத் தசைகளுக்கான உடற் பயிற்சிகளைத் தொடக்கலாம். தவிர சிசேரியனுக்குப் பிறகு வேறென்ன செய்ய வேண்டும்… எப்போதெல்லாம் பரிசோதனைக்கு வரவேண்டும் என்பதையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சிசேரியனால் ஆபத்து உண்டா?
*பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
*மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.
*ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

நீர்மூழ்கிக் கப்பல்!


நீர்மூழ்கிக்கப்பல் தண்ணீரில் அமிழ்வதற்குத் தேவையான நடவடிக்கை மிகவும் எளிதானது. நீர்மூழ்கிக்கப்பலின் எடை, அதை மிதக்க வைக்கும் தண்ணீரின் சக்தியை விட அதிகரிக்கும்படி செய்கிறார்கள். இதை எப்படிச் செய்வது? நீர்மூழ்கிக்கப்பலை மிதக்க வைக்கும் காற்று அடங்கிய டாங்குகளில் கடல் தண்ணீர் புகவிடுகிறார்கள். காற்றின் இடத்தைக் கடல் தண்ணீர் பிடித்துக்கொள்கிறது.
நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள தண்ணீர், டாங்குகளில் நிறைகிறது. அதன் விளைவாக நீர்மூழ்கிக்கப்பலின் எடை அதிகரிக்கிறது. அதன் இருப்பில் உள்ளதாகக் கருதப்படும் மிதக்கும் திறன் அகற்றப்படுகிறது. இருப்பில் உள்ள மிதக்கும் திறன் என்றால் என்ன? நீர்மூழ்கிக்கப்பல் மிதக்கும்போதும், முழுமையாக அமிழும்போதும் இடர்ப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்கு இடையே உள்ள வித்தியாசம்.
நீர்மூழ்கிக்கப்பல், அதன் டாங்குகளில் உள்ள தண்ணீர் இரண்டின் எடையும் சேர்ந்து இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடையை விட அதிகமாக இருந்தால் நீர்மூழ்கிக்கப்பல் மூழ்கிவிடும். அதிகபட்சமாக நீர்மூழ்கிக்கப்பல் 600 அடி ஆழம் வரை செல்லலாம். அதற்கு அதிகமான ஆழத்தில் நீர்மூழ்கிக்கப்பலின் உடற்பகுதியை தண்ணீர் பயங்கரமாக அழுத்தும் அபாயம் ஏற்படும்.
நீர்மூழ்கிக்கப்பலை ஒரு குறிப்பிட்ட ஆழத்தில் நிறுத்தி வைப்பதற்கு மின்சார மோட்டார்கள் மூலம் அதிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதாவது நீர்மூழ்கிக் கப்பலின் எடை, இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரின் எடைக்குச் சமமாகும்வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது நீர்மூழ்கிக்கப்பல் மேலேயும் போகாது, கீழேயும் போகாது.
நீர்மூழ்கிக்கப்பல், கடல் மட்டத்துக்கு வருவதற்கு டாங்குகளில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அப்போது நீர்மூழ்கிக்கப்பலின் எடை, இடப்பெயர்ச்சி ஆகும் தண்ணீரை விட இலேசாகிவிடுகிறது. கப்பலும் மேலே வந்துவிடுகிறது.

குழந்தைக்கு என்ன உணவு தருவீங்க!


*குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
*குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
*உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.
உணவு சாப்பிட மறுத்தால்
*சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.
*சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
*ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
*சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.
*அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.
நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.
*குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும் வேக வைத்து மசித்த காய்கறிகள்:
*பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
*முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.
*இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.
*ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.
*எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும்.
*அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

எக்ஸெல் தெரிந்ததம்… தெரியாததும்…


எக்ஸெல் தெரிந்ததம்… தெரியாததும்…
எக்ஸெல் டேபிளை வேர்டில் பொருத்த: எக்ஸெல் ஒர்க் ஷீட்டிலிருந்து டேபிள் ஒன்றை வேர்ட் தொகுப்பிற்கு மாற்றுகிறீர்கள். என்ன நடக்கிறது? சில வேளைகளில் சில கட்டங்களில் இருந்த டேட்டாவில் பாதியைக் காணவில்லை. எங்கு போயிற்று இந்த டேட்டா? என்ற கேள்வியுடன் வேர்ட் பைலின் பக்கத்தை போர்ட்ரெய்ட் லிருந்து லேண்ட்ஸ்கேப் ஆக மாற்றிப் பார்க்கிறீர்கள். அல்லது டேபிளின் அகலத்தை அதிகப்படுத்தி டேட்டாவைப் பெற முயற்சிக்கிறீர்கள். ஆனால் இந்த செயல்கள் எல்லாம் டாகுமெண்ட்டின் மற்ற பகுதிகளைப் பாதிக்கும். அல்லது மவுஸின் கர்சரை மேலாக வைத்து இழுத்து செல்களை அகலமாக்கிப் பார்க்க முயற்சிப்பீர்கள்.
இதுவும் பிரச்னைக்குரியதே. உண்மையான பிரச்னை என்னவென்றால் ஒரு செல்லில் அடைபடுவதற்கு மேலாகவே டெக்ஸ்ட் உள்ளது. இதனை வேறு சில இடங்களில் மவுஸால் கிளிக் செய்வதன் மூலம் மாற்றலாம். டேபிளை செலக்ட் செய்து பின் அதன் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின் Autofit என்பதற்கு மவுஸை உருட்டி AutoFit to Window என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இன்னமும் டேபிளின் அகலம் மார்ஜின் கோடுகளைத் தாண்டி தோற்றமளித்தால் பாண்ட் அளவினைச் சற்று குறைத்துப் பார்க்கவும். இதற்கு டேபிளை முதலில் செலக்ட் செய்திடுங்கள். பின் கீகளை அழுத்தினால் எழுத்தின் அளவு குறைந்து டேபிள் சரியாகிக் காட்சி அளிக்கும். இதன் பின்னும் பிரச்னை இருந்தால் ஏதேனும் காலம் பார்டரில் டபுள் கிளிக் செய்தால் நெட்டு வரிசையினைத் தானாக சுருங்கும்படி செய்திடலாம்
பல பக்கங்களில் ஒரு ஒர்க்ஷீட்டை அச்சிட:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டினை நல்ல முறையில் படித்தறிய அதனை எப்படி தோற்றமளித்தால் நன்றாக இருக்குமோ அதன்படி பிரித்து அச்சிடுவது நல்லது. எடுத்துக் காட்டாக 10 படுக்கை வரிசைகள் உள்ள ஒர்க் ஷீட்டில் முதல் மூன்று ஒரு பக்கத்திலும் அடுத்த ஏழு அடுத்த பக்கத்திலும் இருக்கும் படி அச்சடித்தால் படிப்பவர்களுக்கு தகவல்கள் சிறப்பாகக் கிடைக்கும் என நீங்கள் திட்டமிடலாம். இதனைச் செயல்படுத்த எந்த படுக்கை வரிசையிலிருந்து வரிசைகள் அடுத்த பக்கத்தில் தோன்ற வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதன் முதல் செல்லில் கர்சரை வைத்துப் பின் “Insert” “Page Break” தேர்ந்தெடுக்கவும். உடனே புள்ளிகளால் ஆன ஒரு படுக்கைக் கோட்டினை நீங்கள் அந்த வரிசைக்கும் மேலாக பார்க்கலாம். இதிலிருந்து அச்சில் இந்த வரிசை அடுத்த பக்கத்திற்குப் போய் விட்டது என்று பொருள்.
அச்சில் எப்படி இருக்கும்?
எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றை பெரிய ஸ்ப்ரெட் ஷீட்டுடன் உருவாக்கிக் கொண்டிருக்கையில் அந்த ஒர்க் ஷீட் அச்சில் எப்படி தோன்றும் என்பது தெரிந்தால் நாம் நமக்கேற்றபடி செல்களையும் வரிசைகளையும் சரி செய்திடலாம் அல்லவா? இதனால் டேபிள்கள் பக்கங்களுக்கு இடையில் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அதே போல் பக்கங்களும் உடையாமல் ஒரே பக்கத்தில் ஒரே மாதிரியான தகவல்கள் தெரியும் படி அமைத்துக் கொள்ளலாம். இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.
1. “Tools மெனு கிளிக் செய்து அதில் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இனி கிடைக்கும் Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “View” என்னும் டேபில் கிளிக் செய்திடவும்.
3. இதில் உள்ள “Window Options” என்னும் பிரிவில் “Page breaks” என்பதன் அருகே நீங்கள் விரும்பியபடி டிக் செய்திடலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். செல்லுக்குள் சுருங்கும் எண்கள் எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி உள்ளது. எண்களை சிறியதாக்கிவிட்டால் செல்லுக்குள் அடங்கிவிடும் அல்லவா? இந்த வேலையை யார் பார்ப்பார்கள்? எண்களை அடித்துப் பின் செலக்ட் செய்து பின் அதன் அளவைச் சுருக்கும் வேலை நேரம் எடுக்கும் செயல் அல்லவா? தேவையே இல்லை. கம்ப்யூட்டரே அதனைப் பார்த்துக் கொள்ளும்.
செல்லின் அகல அளவைக் கூட்டாமல் செல்லுக்குள் எண்களின் அளவைசுருக்கி அமைத்துக் கொள்ளும். எப்படி எழுத்துக்களின் அளவைச் சுருக்கலாம் என்று யோசிக்க வேண்டாம். அதற்கான “shrink to fit” என்ற கட்டளைக் கட்டத்தினைக் கிளிக் செய்திட்டால் போதும். இதற்கு முதலில் எந்த செல்களில் மற்றும் படுக்க வரிசைகளில் இந்த செயல்பாடு தேவையோ அவற்றை முதலில் செலக்ட் செய்திடவும். அதன்பின் பார்மட் செல்ஸ் (Format Cells) விண்டோவினைத் திறக்க வேண்டும். இதற்கு செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Format Cells என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது கண்ட்ரோல் + 1 அழுத்தவும். இதில் கிடைக்கும் டேப்களில் Alignment டேபினைக் கிளிக் செய்து அதற்கான விண்டோவினைப் பெறவும். Text Control section என்ற பிரிவில் என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி தேர்ந்தெடுத்த செல்களில் எண்களை அமைக்கும் போது அவைசெல்லுக்குள் அடங்காதவனவாக இருந்தால் தானாக தன் அளவைச் சுருக்கிக் கொள்ளும்..

RAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா?


கம்ப்யூட்டரைப்பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதப்பட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது டிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன.
ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு டெராபைட் கள் சாதாரணமாய்ப் பேசப் படும் அளவிற்கு வந்துவிட்டன. என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே அளவுகளில் தான் பேசப்படுகின்றன. கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன் பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன.
RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப் பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் கீஅM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே.
ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும்.
எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAM மெமரி இயங்குவதால் மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல் களைக் கொண்டு இயக்க விரும்பி னால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும். அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம். இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற் றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம்.
இவை இருவகைகளில் தற்போது பிரபலமாய் உள்ளன. அவை:
SIMM எனப்படும் Single Inline Memory Module மற்றும் DIMM எனப்படும் Dual Inline Memory Module ஆகும். முதல் வகை இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் இரண்டாவது வகையே அடிப்படை தரத்தைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டரின் மெமரி அதிக அளவில் இருந்தால் தான் நிறைய அளவிலான எண்ணிக்கையில் புரோகிராம்களை இயக்க முடியும். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில் ஒரு ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்க தேவையாய் உள்ளது.
இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்கு தயாராய் எப்போதும் ரெடியாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க பயன்படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப் படுத்தப்படுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.

கேள்விகளும் பதில்களும்


கேள்விகளும் பதில்களும்
கேள்வி: என் நண்பர் அவரின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பில் அட்ரஸ் பார்களில் சிலவற்றிற்கு அந்த முகவரிக்கான எண்களைப் போட்டு வைத்து கிளிக் செய்கிறார். அவருக்கு மட்டும் எப்படி முகவரிக்கான எண்கள் கிடைக்கின்றன?
பதில்: இன்டர்நெட் முகவரிக்கான எண்களை அனைத்திற்கும் உங்கள் நண்பர் போடவில்லையே. ஒரு சிலவற்றிற்கு ஏற்கனவே போட்டுவைத்து அவை ஹிஸ்டரியில் இருப்பதால் அட்ரஸ் பாரில் கர்சர் போனவுடன் முகவரி எண்களில் கிடைக்கிறது. இதனை இரு வழிகளில் பெறலாம்.  முதலாவதாக நீங்கள் எழுத்துக்களினால் ஆன முகவரியினை அமைத்து தேடிப் பிடித்துப் பார்க்கையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடது அடிப்பாகத்தில் அந்த முகவரிக்கான எண்கள் தெரியும். அதனை அப்படியே எழுதி வைத்து மீண்டும் முகவரிக்காக பயன்படுத்தலாம். அல்லது நேரடியாகவே கண்டுபிடிக்கலாம். முதலில் இணையத் தொடர்பை ஏற்படுத்துங்கள். பின்னர் Start  பட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run  பிரிவில் கிளிக் செய்திடவும்.
இப்போது கிடைக்கும் Run  விண்டோவில் cmd  என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும். அதில் tracert   என டைப் செய்து  (trace route என்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும். ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.
கேள்வி: நான் சிடியில் சில பாடல்களை எழுத முற்படுகையில் பபர் அன்டர் ரன் என்ற செய்தி வந்தது. அதன்பின் பாடல்களை எழுத முடியவில்லை. அந்த சிடியும் பயனற்றுப் போய்விட்டது. இதனால் தொடர்ந்து சிடி டிரைவினைப் பயன்படுத்த அச்சமாக இருக்கிறது. இது எதனால் ஏற்பட்டது? எதில் குறை?
பதில்: பிரச்னைக்குச் சுருக்கமான காரணத்தைச் சொல்லட்டுமா? சிடி எழுதுகையில் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவிலிருந்து தகவல்கள் அதன் வேகத்திற்கு ஏற்ற வகையில் செல்லவில்லை. இதைச் சற்று விபரமாகப் பார்ப்போமா! சிடி –ஆர் டிரைவ்கள் உங்கள் ஹார்ட் டிரைவிலிருந்து தகவல்களை அல்லது பாடல் பைல்களை பபர் எனப்படும் மெமரி ஏரியாவில் சிடியில் எழுதும் முன் போட்டு வைக்கின்றன. இந்த ஏற்பாட்டின் அடிப்படை என்னவென்றால் தகவல்கள் சீரான ஓட்டத்தில் சிடிக்கு எழுதச் செல்ல வேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு சிடியில் தகவல்களை எழுதும்போது (எரிக்கும்போது – பர்னிங் சிடி) அது ஜஸ்ட் லைக் தேட் என்று சொல்லும் வேகத்தில் நடைபெறுகிறது. மெமரி ஏரியாவான பபரில் தகவல்கள் தங்கி இருக்கும் வரை சிடி டிரைவ் அவற்றை சிடியில் எழுத முடியும். இந்த பபர்  ஏரியா காலியாகி அந்த இடத்தில் தகவல்கள் நிரப்பப்படாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இந்நிலை கம்ப்யூட்டர் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தால், அதாவது வேறு புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால், ஏற்படலாம். அப்போது சிடி டிரைவில் சுழன்று கொண்டிருக்கும் சிடியில் எழுத தகவல்கள் கிடைக்காது. ஒரு சிடி எழுதப்படுகையில் அதன் ஒவ்வொரு செக்ஷனுக்கும் போதுமான தகவல்கள் சென்று கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் எழுதும் பணியில் தடங்கல் ஏற்படும். டிஸ்க்கும் குப்பைக்குப் போகும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே சிடியில் எழுதுகையில் வேறு புரோகிராம்களை இயக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக உங்கள் ஸ்கிரீன் சேவர் இயங்குவதனையும் நிறுத்துவது நல்லது. 

சிஸ்டம் டிப்ஸ்


சிஸ்டம் டிப்ஸ்
மை கம்ப்யூட்டருக்கு புதிய வழி
நாம் எல்லாரும் அடிக்கடி பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பிரிவு மை கம்ப்யூட்டர் ஆகும். ஏனென்றால் இதன் மூலமே நாம் நம் ஹார்ட் டிஸ்க்கை அணுகுகிறோம். சிடி மற்றும் இயக்கி எடுக்கக் கூடிய பிளாஷ் டிரைவ்களையும் அணுகுகிறோம். மை கம்ப்யூட்டர் போல்டரைப் பெற டெஸ்க் டாப்பில் உள்ள அதன் ஐகானைக் கிளிக் செய்கிறோம்.
அல்லது இன்னும் சற்று சுற்று வழியாக ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் எக்ஸ்புளோர் சென்று பின் அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவில் பெறுகிறோம். இந்த வேலையெல்லாம் வேண்டாம்; எனக்குத் திரை யிலேயே ஒரு மெனு வர வேண்டும்.
அதன் மூலம் மை கம்ப்யூட்டர் பெற வேண்டும் என விரும்புகிறீர்களா! அதற்கான வழியும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஸ்டார்ட் மெனு செல் லுங்கள். அங்கு கிடைக்கும் இரட்டை மெனுவில் வலது பக்கம் பார்வையைச் செலுத்துங்கள். அங்கு மை கம்ப்யூட்டர் என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால் நேராக மை கம்ப்யூட்டர் போல்டருக்குச் செல்வீர்கள். இந்த மெனுவிலேயே மை மியூசிக், மை பிக்சர்ஸ், மை நெட்வொர்க் பிளேசஸ் என்ற போல்டர்களுக்கும் வழி இருப்பதனை நீங்கள் பார்க்கலாம்.
என்ன புரோகிராம் என்ற அறிவிப்பு
கம்ப்யூட்டரில் டூல்பார் அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான் மீது உங்களுடைய மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால் உடனே புரோகிராம் பெயர் சிறிய மஞ்சள் கட்டத்தில் கிடைக்கும். சில புரோகிராம்களுக்கு நாம் மேலும் சில குறிப்புகளை எழுதி வைத்து நமக்கு நினைவூட்டும் படி செய்திடலாம். எடுத்துக் காட்டாக என்னிடம் பிராட்பேண்ட் இணைப்பு இருந்தாலும் அது காலை வாரிவிடும் பட்சத்தில் டெலிபோன் வழியே இணைப்பிற்கான வழியையும் ஏற்படுத்தி ஐகானை உருவாக்கி வைத்திருக்கிறேன். அதனைப் பயன்படுத்தும் முன் சிபியுவின் பின்புறம் இருந்து வரும் டெலிபோன் இணைப்பிற்கான கேபிளை டெலிபோனுடன் இணைக்க வேண்டும்.
இதனை அடிக்கடி மறந்து போவோம். எனவே இந்த புரோகிராம் ஐகான் மீது கிளிக் செய்திட கர்சரைக் கொண்டு சென்றவுடன் Fix the Telephone line first என்ற செய்தி வரும்படி அமைத்துக் கொண்டேன். இதே போல பல புரோகிராம்களுக்கு எச்சரிக்கை செய்தியினைப் போட்டு வைக்கலாம். இதனை ஏற்றுக் கொள்ளும் புரோகிராம்களை இயக் குகையில் நமக்கு ஒரு நினைவூட்டல் கிடைக்கும் அல்லவா! இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்ப்போம்.
எந்த புரோகிராமிற்கு இந்த செய்தி இணைப்பு வேலை நடைபெற வேண்டுமோ அந்த புரோகிராமின் ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லவும். பின் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் விண்டோவில் கீழாக Comment என்ற பிரிவில் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய செய்தியை டைப் செய்து வைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்லும் போதெல்லாம் அந்த செய்தி உங்களுக்குக் காட்டப்படும்.

பில் கேட்ஸின் புதிய தளம்


பில் கேட்ஸின் புதிய தளம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவி, உலகின் முதல் பணக்காரராகத் தன்னையும், சாப்ட்வேர் துறையில் முதல் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் நிலைப்படுத்திய பில் கேட்ஸ் சென்ற ஜூன் 27ல் தன் தலைமைப் பதவியிலிருந்து தானாக வெளியேறினார்.
ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டிருந்த படிப்பை பாதியில் விட்டு வெளியேறி, வீடுகளுக்கும் சிறிய அலுவலகங்களுக்கும் கம்ப்யூட்டரை ஓர் இன்றியமையாத சாதனமாக உருவாக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவி, உலகின் முதல் பணக்காரராகத் தன்னையும், சாப்ட்வேர் துறையில் முதல் நிறுவனமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் நிலைப்படுத்திய பில் கேட்ஸ் சென்ற ஜூன் 27ல் தன் தலைமைப் பதவியிலிருந்து தானாக வெளியேறினார்.
தர்ம சிந்தனையுடன் மற்றவருக்கு உதவும் பணிகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். படிப்பை பாதியில் விட்ட தன் பழைய மாணவர் பில் கேட்ஸுக்கு ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் பின்னாளில் கவுரவ டாக்டர் பட்டம் அளித்து தன்னை உயர்த்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
1955 ஆம் ஆண்டு அக்டோபர் 28ல் பிறந்தவர் பில் கேட்ஸ். இன்று உலகச் சாதனையாளர்களில் ஒருவராக விளங்குவதற்குக் காரணம் அவருடைய தீர்க்கமான எதிர்கால இலக்குகளும் அவற்றை ஈடேற்ற அவர் எடுத்த முயற்சிகளும் தான். தன் 13 ஆவது வயதில் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கான புரோகிராமினை எழுதினார். 1975ல் தன் இளம்பிராய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவினார். தன் எதிர்காலக் கனவான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வளப்படுத்தவே ஹார்ட்வேர்ட் பல்கலையிலிருந்து வெளியேறினார். அப்போதே ஒவ்வொரு வீட்டிலும், அலுவலகத்திலும், பெர்சனல் கம்ப்யூட்டர் தனி ஒரு மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் துணையாக இருந்து மாபெரும் மாறுதலை உண்டு பண்ணும் என்று உறுதியாக நம்பி அதற்கான வழிகளைக் கண்டறிவதில் இறங்கினார்.
முதலில் ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற் கொண்டு அந்நிறுவனத்தின் கம்ப்யூட்டர் இயங்குவதற்குத் தேவையான டாஸ்  (MSDOS Microsoft Disk Operating System)   இயக்கத் தொகுப்பினை வழங்கினார். தான் விற்பனை செய்திடும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஐ.பி.எம். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தியது. இதன் மூலம் சாப்ட்வேர் சந்தையில் தனி ஆளாக முதல் இடத்தைப் பிடித்தது மைக்ரோசாப்ட். அது இன்றும் தொடர்கிறது.
1983ல் வேர்ட் தொகுப்பினை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. அப்போதே விண்டோஸ் இயக்கத் தொகுப்பு தயாரிப்பிற்கான அறிவிப்பு வெளியானது. 1985ல் விண்டோஸ் வெளியானது. பின் 10 ஆண்டுகள் கழித்து விண்டோஸ் 95 பலத்த ஆரவாரத்திற்கிடையே வெளியானது. தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 2 வெளியானது. 1999ல் பில் கேட்ஸ் எழுதிய  Business @ the Speed of Thought என்ற நூல், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வர்த்தக நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் என்று உலகிற்கு எடுத்துச் சொல்லியது. 60 நாடுகளில் 25 மொழிகளில் இன்றும் இந்த நூல் விற்பனையாகிறது.
பலர் பலவிதமாகக் குற்றங்க ளை, குறைகளைத் தெரிவித்தாலும், பல்வேறு இயக்கத் தொகுப்புகள் பெர்சனல் கம்ப்யூட் டர்களுக்கெனத் தோன்றி சிலரால் பயன்படுத்தப்பட்டாலும், விண்டோஸ் இயக்கத் தொகு ப்பு இன்றும் உலகின் பெரும் பான்மையான கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. அதன் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக அக்டோபர் 25, 2001ல் விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பு வெளியானது. 2003ல் கரங்களில் வைத்துப்பயன்படுத்தும் சிறிய கம்ப்யூட்டர்களுக் கும் மொபைல் போன்களுக்குமான ஆப்பரேட் டிங் சிஸ்டமான விண்டோஸ் மொபைல் தொகுப்பு வெளியானது. எக்ஸ்பாக்ஸ் 360 என்ற பெயரில் விளையாட்டுகளுக்கான ஒரு பொழுது போக்கு சாதனத்தை உருவாக்கி மைக்ரோசாப்ட் அளித்தது. 2007 ஜனவரி 13ல் விண்டோஸ் விஸ்டா மற்றும் ஆபீஸ் 2007 வெளியானது. மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாகி வளரும்போதே பில் கேட்ஸ் சமுதாய நலப் பணிகளுக்காக பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் ட்ரஸ்ட் ஒன்றை உருவாக்கினார்.
எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரச்சாரம், ஏழ்மை நாடுகளுக்கு உதவி, கம்ப்யூட்டர் கல்வி அளித்தல் எனப் பல்வேறு பிரிவுகளில் அனைத்து நாடுகளுக்கும் இந்த ட்ரஸ்ட் உதவி வருகிறது. அவருடைய  நிறுவனத்தைப் போலவே இந்த தர்ம ஸ்தாபனமும் மிகப் பெரிய அளவிளான நிதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 2006 ஜூன் 15ல் பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து படிப்படியாக விலகி சமுதாய நலப் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். ஜூன் 27ல் அந்த முடிவினைச் செயல்படுத்தினார். இருந்தாலும் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயல்படா தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார். தொழில் நுட்ப திட்டங்களில் அவ்வப்போது தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் என்றே தெரிகிறது. அவரை வாழ்த்துவோம்.
இனி அடுத்த வளர்ச்சி எப்படி?
சாதாரண கம்ப்யூட்டரில் தொடங்கி இன்று பிராட்பேண்ட் பயன்படுத்தும் நாள் வரை வந்துவிட்டோம். இனி அடுத்த வளர்ச்சி எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு பில் கேட்ஸ் கூறியது: இன்று கம்ப்யூட்டரால் பார்க்க முடியவில்லை; பேச இயலவில்லை; நாம் பேசுவதைக் கேட்க முடியவில்லை. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் அவை பார்க்கும், பேசும், நாம் பேசுவதைக் கேட்டுச் செயல்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் இந்த செயல்களில் மனிதர்களைக் காட்டிலும் சிறப்பாகவே ஈடுபடும்.

உங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள்


உங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள்
புதிய மேக் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கியிருக்கிறீர்களா! அழகுதான். அதில் செயல்படுவது ஒரு தனி அனுபவம்தான். ஆனால் வாங்கி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டால் அதன் வேகம் குறைந்து இருக்கும்.
ஆம், நிச்சயம் குறைந்திருக்கும். வாங்கும்போது இருந்ததைக் காட்டிலும் இயங்கும் வேகம் சற்று குறைவுதான். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டரின் இயக்கத்தினைப் பழையதாக்கும் புரோகிராம் ஒன்று இரண்டு ஆண்டுகளில் இயக்கப்பட்டு வேகத்தைத் தடுக்கும் என்றும் சொல்கின்றனர்.
இன்னும் சிலர் தகவல்கள் அடங்கிய பைல்கள் தொடர்ந்து சிஸ்டத்தில் அடுக்கப்படுவதால் அதன் சுமை இயக்க வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று கூறுகின்றனர். இப்படி பல யூகங்களும் சில வேளைகளில் சரியான காரணங்களும் சொல்லப்பட்டாலும் ஒரு நல்ல முடிவொன்று நமக்குக் கிடைத்துள்ளது. உங்கள் மேக் சிஸ்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து அதனை அது வந்த முதல் நாள் எப்படி செயல்பட்டதோ அதே போன்று அமைத்துவிடலாம் என்பதே. இந்த ஊட்டச் சத்து டானிக் எப்படி வழங்கி சிஸ்டத்தை அமைப்பது என்று பார்ப்போம்.
1. முதலில் சிஸ்டத்தில் உள்ள பைல்கள் அனைத்தையும் பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அல்லது மீடியத்திற்குக் கொண்டு செல்லுங்கள். இதற்கு சூப்பர் டூப்பர் போன்ற புரோகிராமினைப் பயன்படுத்தலாம்; அல்லது ஆப்பிள் வழங்கும் பேக் அப் புரோகிராமினை இயக்கலாம். ஆப்பிள் புரோகிராம் பயன்படுத்தி பைல்கள் அனைத்தையும் நகர்த்தி, பின் மீண்டும் மேக் சிஸ்டத்தை அமைத்து அதன்பின் அனைத்து பைல்களையும் மீண்டும் கம்ப்யூட்டருக்குக் கொண்டுவரும் வேலையை மேற்கொள்வதாக இருந்தால் உங்களுக்கு ஒரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிரைவ் வேண்டும்.
2. அடுத்து உங்கள் அப்ளிகேஷன்ஸ் போல்டரைத் திறந்து (Macintosh HD\Applications)   அதில் உள்ள அப்ளிகேஷன்ஸ் புரோகிராம்களை இழுத்து வந்து விடுங்கள். பல மாதங்களாக நீங்கள் பயன்படுத்தாத புரோகிராம்களை ஒதுக்கி விடுங்கள். பயன்படுத்தவில்லை என்றால் தேவை இல்லை என்றுதானே பொருள். அப்படியே வேண்டும் என்றால் பின் நாளில் டவுண்லோட் செய்திடலாம்.
3. அடுத்து முக்கிய டாகுமெண்ட்களை காப்பி செய்வது. இதற்கு Macintosh HD\Users\your account name\Documents  என்ற போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். டாகுமென்ட்ஸ் எப்போதும் தேவை என்பதால் எதனையும் விட்டுவிட வேண்டாம். ஆப்பிள் மெயில் நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் உங்களுடைய இமெயில் போல்டர்களை (Macintosh HD\Users\your account name\Library\Mail)   என்ற போல்டருக்குக் கொண்டு செல்லுங்கள்.
4. மீடியா சேவ் செய்திடுக: மீடியா பைல்களை காப்பி செய்வது மூன்று நிலைகளில் மேற்கொள்ள வேண்டும்.
நீங்கள் டிகூதணஞுண் மூலம் தான் உங்கள் பாடல் பைல்களைக் கேட்கிறீர்கள் என்றால் உங்களுடைய முழு ஐட்யூன்ஸ் போல்டரை (Macintosh HD\Users your account name\Music\iTunes)  என்ற போல்டருக்குக் கொண்டு செல்லவும். இதே போல  iPhoto library  போல்டரை Macintosh HD\Users\your account name\Pictures\iPhoto Library  என்ற போல்டருக்குக் கொண்டு செல்லவும். பொதுவாக மீடியா பைல்கள் பெரிய அளவில் இருக்கும் என்பதால் இதனை மாற்றுவதற்கு அதிக நேரம் எடுக்கலாம்; பொறு மை சற்று தேவை.
5. செட்டிங்ஸ் மற்றும் புக்மார்க்: மேக் பயன்படுத்திய நாள்முதல் நீங்கள் ஏற்படுத்திய செட்டிங்ஸ் மற்றும் புக் மார்க்குகளை சேவ் செய்திட மறக்கக் கூடாது. இதற்கு உங்கள் செட்டிங்ஸ் அனைத்தையும் சிங்க் செய்வதுதான் சிறந்த வழி. இதற்கு Mac Sync  தேர்ந்தெடுக்க வேண்டும். மேக் சிங்க் தேர்ந்தெடுக்க  System Preferences  செல்லவும். பின் Mac  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் டூல்பாரில் Syn  மீது கிளிக் செய்திடவும். அதன்பின் எவற்றை சிங்க் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து சிங்க் செய்யுங்கள். பிரவுசர் புக்மார்க்குகளை எப்படி சேவ் செய்வது என்று பார்ப்போம். சபாரி பயன்படுத்துவோர் File  மீது கிளிக் செய்து Export Bookmarks  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் பைல்களை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்திடவும். உங்களிடம் மேக் அக்கவுண்ட் இருந்தால் Preferences | Bookmarks  சென்று Synchronize my bookmarks using.Mac  என்பதில் செக் மார்க் அடையாளம் ஏற்படுத்தவும். பயர்பாக்ஸ் பயன்படுத்தினால் Bookmarks  என்பதில் கிளிக் செய்திடவும். புக்மார்க்ஸ் விண்டோ திறந்தவுடன் File என்பதில் கிளிக் செய்து பின் Export  திறந்து உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் பதிய கட்டளை கொடுக்கவும். இதே போல ஆப்பரா பயன்படுத்துபவர்கள் File | Import and Export | Export Opera Bookmarks  என்று தரவும்.
6. ஸ்கிரீன் ஷாட்ஸ் : சில விஷயங்களை மேக் கம்ப்யூட்டரிலிருந்து எடுத்து ஹார்ட் டிஸ்க்கிற்குக் கொண்டு செல்ல முடியாது. எடுத்துக் காட்டாக மேக் திரை எப்படி காணப்படுகிறது. அழகாக ரசனையுடன் அமைத்திருப்பீர்கள். உங்களுடைய பைல்களை ஒரு குறிப்பிட்ட நீங்கள் விரும்பும் வகையில் அமைத்திருப்பீர்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்க முக்கியம் இல்லை என்றாலும் இவற்றை ஏன் நாம் இழக்க வேண்டும்.  பின் தீர்வு தான் என்ன? இவற்றை ஸ்கிரீன் ஷாட்களாக எடுத்து அந்த பைல்களை சேவ் செய்திடுங்கள். இதற்கு ShiftCommand3  என்ற வகையில் கட்டளை கொடுத்தால் ஸ்கிரின் ஷாட் கிடைக்கும்.
ShiftCommand 4 கொடுத்தால் எவை மட்டும் வேண்டுமோ அவை மட்டும் காப்பி ஆகும். உங்கள் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கில் அனைத்தும் திணித்தாயிற்றா? இப்போது மேக் சிஸ்டம் பைல்களை ரீ இன்ஸ்டால் செய்திடும் வேளை வந்துவிட்டது. இது 30 நிமிடத்திலிருந்து 90 நிமிடம் வரை கூட நேரம் எடுக்கும். அது உங்கள் கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத் தைப் பொறுத்தது. இன்ஸ்டலேஷன் டிவிடியைப் போட்டுவிட்டு அது சொல்லும் வழிகளைப் பின்பற்றி வந்தால் போதும். ரீ இன்ஸ்டால் பணி மேற்கொள்ளப்படும்.
அடுத்து பைல்க ளை மீண்டும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து கம்ப்யூட்டருக்கு மாற்ற வேண்டும். இதில் இரண்டு பணிகளைத் தனியே மேற்கொள்ள வேண் டும். சபாரி பிரவுசரின் புக்மார்க்குகளை மாற்ற சபாரியில் File  திறந்து Import Bookmarks  என்பதில் கிளிக் செய்திடவும். எங்கு இவை இருக்க வேண்டும் என்பதனையும் நீங்கள் சுட்டிக் காட்ட வேண்டும்.  பயர்பாக்ஸில் Bookmarks | Organize Bookmarks  என்று சென்று File | Import  என கட்டளை கொடுக்கவும். இமெயில் செட்டிங்ஸ் அமைக்க ஆப்பிள் மெயில் திறந்து பின்  File  என்பதில் கிளிக் செய்திடவும்.
பின்னர் mport Mailboxes   என்று கட்டளை கொடுக்கவும். “Mail for Mac OS X”  லிருந்து டேட்டாவினை இறக்கிட மெயில் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மெயில்கள் அனைத்தும் “Imported.” என்னும் புதிய போல்டரில் காப்பி ஆகும். இதிலிருந்து அந்த அந்த மெயில் பாக்ஸ்களுக்கு மெயில்களை இழுத்து கொண்டு சென்று காப்பி செய்துவிடலாம். இவ்வளவும் செய்திட சற்று நேரம் பிடிக்கும் என்பது உண்மையே. மதியம் சாப்பாட்டிற்குப் பின் ஓய்வெடுக்கையில் இந்த செயலை மேற்கொள்ளுங்கள். வேலை முடிந்த பின்னர் மேக் கம்ப்யூட்டர் இயக்கத்தைப் பாருங்கள். புதிய வேகத்தில் இயங்கத் தொடங்கும்.
 
Copyright © 2010 ITT Information. All rights reserved.