21 Nov 2011

கேள்விகளும் பதில்களும்


கேள்விகளும் பதில்களும்
கேள்வி: என் நண்பர் அவரின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பில் அட்ரஸ் பார்களில் சிலவற்றிற்கு அந்த முகவரிக்கான எண்களைப் போட்டு வைத்து கிளிக் செய்கிறார். அவருக்கு மட்டும் எப்படி முகவரிக்கான எண்கள் கிடைக்கின்றன?
பதில்: இன்டர்நெட் முகவரிக்கான எண்களை அனைத்திற்கும் உங்கள் நண்பர் போடவில்லையே. ஒரு சிலவற்றிற்கு ஏற்கனவே போட்டுவைத்து அவை ஹிஸ்டரியில் இருப்பதால் அட்ரஸ் பாரில் கர்சர் போனவுடன் முகவரி எண்களில் கிடைக்கிறது. இதனை இரு வழிகளில் பெறலாம்.  முதலாவதாக நீங்கள் எழுத்துக்களினால் ஆன முகவரியினை அமைத்து தேடிப் பிடித்துப் பார்க்கையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் இடது அடிப்பாகத்தில் அந்த முகவரிக்கான எண்கள் தெரியும். அதனை அப்படியே எழுதி வைத்து மீண்டும் முகவரிக்காக பயன்படுத்தலாம். அல்லது நேரடியாகவே கண்டுபிடிக்கலாம். முதலில் இணையத் தொடர்பை ஏற்படுத்துங்கள். பின்னர் Start  பட்டன் அழுத்தி கிடைக்கும் மெனுவில் Run  பிரிவில் கிளிக் செய்திடவும்.
இப்போது கிடைக்கும் Run  விண்டோவில் cmd  என டைப் செய்திடவும். இனி உங்களுக்கு டாஸ் பிராம்ப்ட் கருப்பு கட்டத்தில் கிடைக்கும். அதில் tracert   என டைப் செய்து  (trace route என்பதின் சுருக்கம்) இடம் விடாமல் நீங்கள் எண் காணவிரும்பும் முகவரியினைத் தவறில்லாமல் டைப் செய்து என்டர் அழுத்தவும். உடனே முதல் வரியிலேயே அடைப்புக் குறிக்குள் எண் கிடைக்கும். ஆனால் அந்த சர்வரை அடைய என்ன சர்வர்கள் வழியாக ரூட் செல்கிறது என்று வேகமாகக் காட்டப்பட்டு இறுதியிலும் அந்த இணைய தளத்திற்கான முகவரி எண்களில் கிடைக்கும்.
கேள்வி: நான் சிடியில் சில பாடல்களை எழுத முற்படுகையில் பபர் அன்டர் ரன் என்ற செய்தி வந்தது. அதன்பின் பாடல்களை எழுத முடியவில்லை. அந்த சிடியும் பயனற்றுப் போய்விட்டது. இதனால் தொடர்ந்து சிடி டிரைவினைப் பயன்படுத்த அச்சமாக இருக்கிறது. இது எதனால் ஏற்பட்டது? எதில் குறை?
பதில்: பிரச்னைக்குச் சுருக்கமான காரணத்தைச் சொல்லட்டுமா? சிடி எழுதுகையில் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிரைவிலிருந்து தகவல்கள் அதன் வேகத்திற்கு ஏற்ற வகையில் செல்லவில்லை. இதைச் சற்று விபரமாகப் பார்ப்போமா! சிடி –ஆர் டிரைவ்கள் உங்கள் ஹார்ட் டிரைவிலிருந்து தகவல்களை அல்லது பாடல் பைல்களை பபர் எனப்படும் மெமரி ஏரியாவில் சிடியில் எழுதும் முன் போட்டு வைக்கின்றன. இந்த ஏற்பாட்டின் அடிப்படை என்னவென்றால் தகவல்கள் சீரான ஓட்டத்தில் சிடிக்கு எழுதச் செல்ல வேண்டும் என்பதுதான். நீங்கள் ஒரு சிடியில் தகவல்களை எழுதும்போது (எரிக்கும்போது – பர்னிங் சிடி) அது ஜஸ்ட் லைக் தேட் என்று சொல்லும் வேகத்தில் நடைபெறுகிறது. மெமரி ஏரியாவான பபரில் தகவல்கள் தங்கி இருக்கும் வரை சிடி டிரைவ் அவற்றை சிடியில் எழுத முடியும். இந்த பபர்  ஏரியா காலியாகி அந்த இடத்தில் தகவல்கள் நிரப்பப்படாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இந்நிலை கம்ப்யூட்டர் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தால், அதாவது வேறு புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்தால், ஏற்படலாம். அப்போது சிடி டிரைவில் சுழன்று கொண்டிருக்கும் சிடியில் எழுத தகவல்கள் கிடைக்காது. ஒரு சிடி எழுதப்படுகையில் அதன் ஒவ்வொரு செக்ஷனுக்கும் போதுமான தகவல்கள் சென்று கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் எழுதும் பணியில் தடங்கல் ஏற்படும். டிஸ்க்கும் குப்பைக்குப் போகும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே சிடியில் எழுதுகையில் வேறு புரோகிராம்களை இயக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக உங்கள் ஸ்கிரீன் சேவர் இயங்குவதனையும் நிறுத்துவது நல்லது. 

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.