18 Nov 2011

மூட்டு வலிக்கு இதமான உணவு


"தலைவலியும் பல் வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்"னு சொல்வாங்க. அதுகூட... மூட்டு வலியையும் சேர்த்துக்கலாம். அது கொடுக்கிற இம்சை அவ்ளோ பெரிசு. வயசானவங்களுக்கு வரக்கூடியது, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற மூட்டு வலி. மூட்டுல உள்ள திரவம் குறைஞ்சு, ஒருவித இறுக்கம் உண்டாகி, உயிர் போகிற மாதிரி வலிக்கும். நம்ம உடம்புல உள்ளே செல்லே, உடல் உறுப்புக்கு எதிரியாகி வேலை செய்யறதோட விளைவு இது.

Good Foods to Avoid For Rheumatism & Osteoarthritis - Food Habits and Nutrition Guide in Tamil





30-40 வயசுல உண்டாகிறது ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்னு சொல்ற வலி. கை, கால் விரல்கள்ல உள்ள சின்னச்சின்ன மூட்டுகள்லகூட இந்த வலியை உணரலாம். முக்கியமா காலை நேரத்துல வலி அதிகமிருக்கும். இது சீசனுக்கு ஏத்தபடி மாறி மாறி வரும். பரம்பரையாகவும் தாக்கக்கூடியது.
எந்தவிதமான மூட்டு வலியா இருந்தாலும், அது நாம சாப்பிடற உணவோட ஓரளவு சம்பந்தப் பட்டதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க மருத்துவர்கள். அதேசமயம் மூட்டு வலியால அவதிப்படற எல்லாருக்கும் அவங்களோட சாப்பாடுதான் காரணம்னும் சொல்லிட முடியாதுங்கிறாங்க அவங்க.
பரம்பரைத்தன்மையோ, வேற காரணமோ இல்லாம திடீர்னு மூட்டு வலியால பாதிக்கப்படறவங்க, முதல்ல கவனிக்க வேண்டிய விஷயம், அவங்களோட டயட்!
மூட்டு வலியால பாதிக்கப்பட்டவங்களை இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினப்ப, அவங்கள்ல பலரும் அசைவ உணவுப்பழக்கம் உள்ளவங்களா இருந்தது தெரிய வந்ததாம். முதல் கட்டமா, அசைவத்துலேர்ந்து சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறச் சொன்னபோது, ஒரு சில நாட்கள்லயே வலி குறையறதை உணர்ந்திருக்காங்க அவங்க. மூட்டு வலியை உண்டாக்கி, அந்த இடத்துல வீக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியது அசைவ உணவு.
அப்படின்னா சைவம் மட்டுமே சாப்பிடறவங்களுக்கு மூட்டு வலி வர்றதில்லையான்னு கேட்கலாம். அவங்களும் கொழுப்பு குறைவான உணவை எடுத்துக்கிறப்ப, வலி குறையறதை உணர்வதா சொல்றாங்க.
சோளம், கோதுமை, ஆரஞ்சு, எலுமிச்சை, ஓட்ஸ், கேழ்வரகு, தக்காளி, பால் மற்றும் பால் பொருட்கள், மிளகு, சோயா, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அதிகாரம், ஆல்கஹால், முட்டை, வேர்க்கடலை, அதிக சர்க்கரை, வெண்ணெய், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி... இதெல்லாம் மூட்டுவலியை அதிகப்படுத்தற உணவுகளாம். மூட்டு வலியோட அறிகுறிகளை உணர்ந்ததுமே, முதல் கட்டமா மேல சொன்ன உணவுகள்ல ஒவ்வொண்ணா நிறுத்திப் பார்க்கலாம். உணவு அலர்ஜியால் உண்டான வலியா இருந்தா, அதை நிறுத்தினதுமே குணம் தெரியும்.
இதய நோய் இருக்கிற சிலருக்கு, மூட்டு வலி இருக்கலாம். அவங்க தினமும் 2 அல்லது 3 பூண்டை பச்சையா சாப்பிடறது இதயம், மூட்டு ரெண்டுக்குமே நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளும் மூட்டுக்கு நல்லது. ஃபிளாக்ஸ் சீட்ஸ்னு இப்ப கடைகள்ல கிடைக்கிற ஆளி விதைல, அக்ரோட், பாதாம்ல இது நிறைய இருக்கு. தவிர சில வகை மீன்கள்லயும் அதிகமா இருக்கு. வலியோட வீக்கமும் சேர்ந்திருந்தா, தினம் இஞ்சியை ஏதாவது ஒரு வகைல எடுத்துக்கிறதும் குணம் தரும்.
மூட்டுவலி வந்ததுமே என்னவோ ஏதோனு அலறத் தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாருங்க. நீங்க அடிக்கடி விரும்பிச் சாப்பிடற ஏதோ ஒரு உணவுகூட அலர்ஜியாகி, வலியைக் கொடுத்திருக்கலாம். அடுத்து கவனிக்க வேண்டியது எண்ணெய், அதையும் அளவோட எடுத்துக்க வேண்டியது முக்கியம். எதுலயும் குணம் தெரியாதப்ப, மருத்துவரைப் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

 
Copyright © 2010 ITT Information. All rights reserved.