பதிவு கொஞ்சம் போரடிக்கிற மாதிரி தோன்றும். முழுதும் படித்துப் பார்த்தால் வியப்பூட்டும் அறிவியல் உண்மைகளை அறிய முடியும்.
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். ------------------------------ இந்த பதிவிற்குள் செல்லும்முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்: 1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள். 2. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils). 3. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர். ------------------------------ அறிவியல் ஆய்விதழான Nature-ரின் செய்திகள் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு பரிணாம உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. அது, Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011. இனி (உலகின்) முதல் பறவையல்ல அர்கீயாப்டெரிக்ஸ் - (Extract from the original quote of) Matt Kaplan, Nature news, 27th July 2011. நீங்கள் மேலே பார்த்ததுக்கூட பரவாயில்லை. இந்த செய்தி வெளியான அடுத்த நாள் Nature இதழில் வெளியான இதுக்குறித்த மற்றொரு கட்டுரையின் தலைப்பு பலரை திக்குமுக்காட வைத்திருக்கும்.
ஏனென்றால் இந்த உயிரினம் நீண்ட காலமாக பரிணாமத்துக்கு ஆதாரமாக காட்டப்பட்டு வந்தது. இந்த உயிரினம் இல்லாமல் பறவைகளின் தோற்றத்தை ஆராய முடியாது என்னும் அளவுக்கு ஒரு நிகரற்ற நட்சத்திரமாக பரிணாம உலகினரால் கொண்டாடப்பட்டது. அந்தோ பரிதாபம், அந்த கொண்டாடத்துக்கு சென்ற வாரத்தோடு முடிவு கட்டப்பட்டுள்ளது. படுசுவாரசிய தகவல்களை தன்னிடத்தே கொண்டுள்ள இந்த செய்திக் குறித்து முழுமையாய் அறிந்துக்கொள்ள நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு பயணிக்க வேண்டும். அது 1859-ஆம் வருடம். சார்லஸ் டார்வினின் "உயிரினங்களின் தோற்றம்" புத்தகம் வெளியாகி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருந்தது. ஒரு உயிரினம் காலப்போக்கில் சிறுகச் சிறுக இன்னொரு உயிரினமாக மாறிவிடுகின்றது என்று வாதிட்ட அந்த புத்தகம் நாத்திகர்களுக்கு பெரும் உற்சாகமாய் அமைந்தது. உயிர்கள் உருவாக கடவுள் தேவையில்லை, அவை தானாகவே காலப்போக்கில் உருவாக்கிக்கொள்ளும் என்று வாதிட ஆரம்பித்தார்கள் டார்வினின் ஆதரவாளர்கள். அவர்களது நம்பிக்கைக்கு மேலும் வலுச்சேர்க்கும்விதமாக 1861-ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. அந்த ஆண்டில், ஜெர்மனியின் பவரியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு உயிரினத்தின் படிமம் அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அந்த படிமத்தில் காணப்பட்ட உயிரினம் ஆச்சர்ய தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டது. அது என்னவென்றால், காக்கை அளவிலான இந்த உயிரினம், பறவைகள் மற்றும் சிறிய அளவிலான டைனாசர்களின் (ஊர்வன) தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்ததாக நம்பப்பட்டது. உதாரணத்துக்கு, பறவைகளின் தன்மைகளான இறகுகளும், மார்புக்கூட்டை வலுப்படுத்தும் எலும்பும் (Wishbone), அதுபோல, ஊர்வனவற்றின் தன்மைகளான பற்களும், நீண்ட கடினமான வாலும் இந்த உயிரினத்துக்கு இருந்ததாக கூறப்பட்டது. இந்த உயிரினத்துக்கு ஜெர்மனில் "யுர்வோகெல் (Urvogel)" என்று பெயர் சூட்டினார்கள். இதற்கு "முதல் பறவை" என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதற்கு "அர்கீயாப்டெரிக்ஸ் (Archaeopteryx)" என்று பெயர் சூட்டினார்கள். இந்த பெயர் கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு "பழங்கால இறகு (Ancient wing or feather)" என்று அர்த்தம். ஆக, டைனாசர்களின் தன்மைகளும் பறவைகளின் தன்மைகளும் ஒருசேர கலந்திருந்ததால், உலகின் முதல் பறவை டைனாசர்களில் இருந்து பரிணாமம் அடைந்து வந்திருக்க வேண்டுமென்று நம்பப்பட்டது. அதற்கு ஆதாரமாக அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. டார்வினின் புத்தகம் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் நடந்த இந்த நிகழ்வு மிகப்பெரிய பாதிப்பை அறிவியல் உலகில் நிகழ்த்தியது. உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக வேறொன்றாக மாறுகின்றன என்று டார்வின் சொன்னது சரிதான் என்று நம்பப்பட்டது. சிறிய அளவிலான டைனாசர்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக (தொடக்க நிலை பறவையான) அர்கீயாப்டெரிக்ஸ்சாக மாறி பின்னர் அவற்றிலிருந்து பறவைகள் வந்தன என்று பரிணாமம் விளக்கப்பட்டது. பரிணாம கோட்பாட்டிற்கு என்ன ஆதாரம் என்று கேட்டவர்களுக்கு, இதோ ஆதாரம் என்று அர்கீயாப்டெரிக்ஸ் காட்டப்பட்டது. மொத்தத்தில், உலகின் முதல் பறவையாகவும், பரிணாம கோட்பாட்டிற்கான வலிமையான ஆதாரமாகவும் அர்கீயாப்டெரிக்ஸ் கொண்டாடப்பட்டது. எப்படி காலங்கள் செல்லச் செல்ல பரிணாமத்தின் மற்ற உயிரினப்படிம ஆதாரங்கள் ஒன்றுமில்லாமல் சிதைந்தனவோ அதுப்போலவே அர்கீயாப்டெரிக்ஸ்சி கடந்த சிலபல ஆண்டுகளாகவே மிகுந்த சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது அர்கீயாப்டெரிக்ஸ். இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து கண்டுப்பிடிக்கபடும் (அர்கீயாப்டெரிக்ஸ் போன்ற) இறகுகள் கொண்ட டைனாசர்களின் (feathered dinosaurs) உயிரினப்படிமங்கள். இறகுகள் இருந்தாலும் இவை பறக்க தகுதி இல்லாதவை. குறிப்பாக சீனாவில் இருந்து மட்டும் மிக அதிக அளவிலான 'இறகுகள் கொண்ட டைசானர்' படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆக, இறகுகள் இருந்து விட்டால் மட்டும் ஒரு உயிரினம் பறக்கும் தன்மையை பெற்றுவிடாது என்பது இதன் மூலமாக புலப்பட்டது. எந்த தன்மைகளை வைத்து அர்கீயாப்டெரிக்ஸ்சை தொடக்க நிலை பறவை (Avialae) என்றார்களோ, அதே தன்மைகள் பறக்க முடியாத டைனாசர்களிலும் காணப்பட்டது. இது பரிணாமவியலாளர்களை மிகுந்த குழப்பத்தில்/சங்கடத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்லாமல், இதுக்குறித்த கேள்விகளை படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை(Intelligent Design குறித்த இத்தளத்தின் பதிவை காண <<இங்கே>> சுட்டவும்) ஆதரிப்போர் தொடந்து எழுப்பி பரிணாமவியலாளர்களுக்கு மிகுந்த அசவுகரியத்தை அளித்தனர். முன்பு போல தன்னம்பிக்கையுடன் பரிணாமத்துக் இந்த நிலையில் தான் நாம் மேலே பார்த்த ஆய்வு முடிவுகள் வந்திருக்கின்றன. இனியும் அர்கீயாப்டெரிக்ஸ்சை பறவை என்று சொல்ல முடியாத நிலைக்கு பரிணாமவியலாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அர்கீ பத்தோடு பதினொன்றாக மற்ற டைனாசர்களுடன் சேர்ந்து விட்டது அர்கீயாப்டெரிக்ஸ். "Perhaps the time has come to finally accept that Archaeopteryx was just another small, feathered, bird-like theropod fluttering around in the Jurassic" - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288. "அர்கீயாப்டெரிக்ஸ்சை மற்றுமொரு சிறிய, இறகுகள் உடைய theropod (முன்னங்கால்களை சிறிதாகக் கொண்ட உயிரினங்கள்) என்று ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இறுதியாக வந்துவிட்டது" இதற்கெல்லாம் காரணம், சீனாவைச் சார்ந்த, தொல்லுயிரியல் உலகில் பெரிதும் மதிக்கப்படும் ஆய்வாளரான ஜிங் சு (Xing Xu) மற்றும் அவருடைய குழுவினர் தான். சீனாவின் வடக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு டைனாசர் படிமத்தை தீவிரமாக ஆராய்ந்த அவர் பல ஆச்சர்ய தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த படிமத்தில் இருந்த உயிரினம், 'ஜியாடின்ஜியா ழெங்கி (Xiaotingia zhengi)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு பறக்க முடியாத, அதே நேரம் இறகுகளை கொண்ட டைனாசர். கோழி அளவிலான இந்த ஜியாடின்ஜியாவின் தன்மைகளும், அர்கீயாப்டெரிக்ஸ் அதுமட்டுமல்லாமல், உயிரியல் மரத்தையும் மாற்றியமைத்து விட்டார் ஜிங் சு. இத்தனை காலங்களாக பறவைகளின் குடும்பத்தில் (Avialae) உட்கார்ந்திருந்த அர்கீயாப்டெரி பரிணாமவியலாளர்கள் இத்தனை காலமாக நம்பி வந்த ஒரு விஷயத்தை தகர்ப்பது என்றால் சும்மாவா????....இதனாலேயே இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது தான் பதற்றத்தொடு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஜிங் சு. "Because it has held the position as the most primitive bird for such a long time, I am kind of nervous about presenting this result" - Xing Xu, as reported by Nature news, 27th July 2011. அர்கீயாப்டெரிக்ஸ், தொடக்க நிலை பறவையாக நீண்ட காலமாக கருதப்பட்டு வந்ததால், இந்த முடிவுகளை சமர்பிக்கும்போது நான் பதற்றத்தோடு இருந்தேன் - (Extracted from the original quote of) Xing Xu, as reported by Nature news, 27th July 2011. ஜிங் சு சமர்பித்தும் விட்டார். 'இனி அர்கீயாப்டெரிக்ஸ் உலகின் முதல் பறவை இல்லை' என்று Nature-ரும் தலையங்கம் வெளியிட்டுவிட்டது. ஆனால் பிரச்சனை இத்தோடு முடிய போவதில்லை. இனி தான் பூதாகரமாக வெடிக்கப்போகின்றது. காரணம், முதல் பறவை என்னும் இடத்தில் இருந்து அர்கீயாப்டெரிக்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளதால், உலகின் முதல் பறவை வேறு எதுவாக இருக்கும் என்று அறிவிக்க வேண்டிய நிலைக்கு ஆய்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பறவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்பது குறித்தும் மிக குழப்பான சூழ்நிலை நீடிக்கின்றது. "The finding leaves palaeontologists in the awkward position of having to identify another creature as the oldest and original avian on which to base the story of birdlife" - Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian. இந்த கண்டுபிடிப்பு தொல்லுயிரியலாளர்களை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது. தற்போது அவர்கள் வேறு ஒரு உயிரினத்தை பழங்கால பறவையாக அடையாளம் கண்டு அதன் மீது பறவைகளின் வாழ்க்கை கதையை நிர்மாணிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர் - (extract from the original quote of) Ian Sample, 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study, 27th july, Guardian. உங்களில் சிலர் நினைக்கலாம், பறவைத்தன்மையை அர்கீயாப்டெரிக் படைப்பு மற்றும் Intelligent Design கோட்பாட்டை ஆதரிக்கும் ஆய்வாளர்களுக்கோ, இது "ஸ்வீட் எடு...கொண்டாடு" தருணம். ஏனென்றால், அர்கீயாப்டெரிக்ஸ் படிமத்தில் இருக்கும் குழப்பங்களை நீண்ட காலமாகவே சுட்டிக்காட்டி வந்தவர்கள் இவர்கள். எது எப்படியோ, கடந்த 150 ஆண்டுகளாக பரிணாமவியலாளர்கள் மனதில் செம்மையாக வாழ்ந்துக்கொண்டிருந்த பறவை சென்ற வாரத்தோடு இறந்துவிட்டது. ஆய்வாளர்களோடு சேர்ந்து அர்கீயாப்டெரிக்ஸ்சின் பறவைத்தன்மைக்கு நாமும் விடைக்கொடுப்போம்.......bye-bye birdie... இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.... Title Inspiration: 1. This article's title "bye-bye birdie" was inspired from a 'Scientific American' article dated 9th Oct 2009. My Sincere thanks to: 1. Nature 2. AFP. References: 1. An Archaeopteryx-like theropod from China and the origin of Avialae - Xing Xu, Hailu You, Kai Du & Fenglu Han. Nature 475, 465–470, 28 July 2011, doi:10.1038/nature10288. link 2. Archaeopteryx no longer first bird - 27 July 2011, Nature, doi:10.1038/news.2011.443. link 3. An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288 (Document available upon request). 4. Earliest bird was not a bird? New fossil muddles the Archaeopteryx story - 27 July 2011, Discover Magazine. link 5. 'Oldest bird' Archaeopteryx knocked off its perch in controversial new study - 27 July 2011, Guardian. link 6. Ancestor of all birds knocked from its perch - Jul 27, 2011, Yahoo on AFP report. link 7. 'Oldest bird' knocked off its perch - 27th July 2011. Cosmic log on msnbc. link 8. Archaeopteryx : An Early Bird - University of california. link 9. Icon 5 — Archaeopteryx - National center for science education. link 10. Archaeopteryx - wikipedia. link 11. Archaeopteryx Knocked From Roost as Original Bird - 27th July 2011, wired.com. link 12. Feathers fly in first bird debate - BBC, 27 July 2011. link 13. Archaeopteryx knocked off its perch as first bird - New Scientist, 27 July 2011. link 14. Flap Flop: Earth's First Bird Not a Bird After All - Live Science, 27 July 2011. link நன்றி:ஆஷிக் அஹமத் அ |
No comments:
Post a Comment