9 Dec 2011

விண்டோஸ் டிஸ்பிளே சில விளக்கங்கள்



கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!
கம்ப்யூட்டர் வாங்கியபோது திரை எப்படி தோன்றியதோ, அப்படியே சிலர் வைத்திருப்பார்கள். பலருக்கு வண்ணக் கலவை பிடிக்காமல் இருக்கலாம். சிலருக்கு அதில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து படிப்பதில் சிரமம் இருக்கலாம். இருந்தாலும் கம்ப்யூட்டர் இப்படித்தான் காட்சி அளிக்கும் என்று எண்ணி அப்படியே பயன்படுத்துவார்கள். அதெல்லாம் வேண்டாம். நம் விருப்பப்படி திரைத் தோற்றத்தினை அமைத்துக் கொள்ளலாம். இதனைத்தான் விண்டோஸ் டிஸ்பிளே என்று கூறுகிறார்கள். இவற்றில் பல அம்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றையும் அவை என்ன மற்றும் எதனைக் குறிக்கின்றன என்று அறிந்து கொண்டால், நம் கம்ப்யூட்டர் நம் மனதிற்கேற்றபடியான தோற்றத்தில் இருக்கும். அவை குறித்து இங்கு காணலாம்.

உடைகள் வாங்கும்போது கவனிக்க.........


 எப்போதும் உடைகள் வாங்கும்போது விலையைத்தவிர வேறு எதையும் நாம் பார்ப்பதில்லை (நானுந்தேன்). ஆனால் விலையைவிட இன்னொன்று முக்கியமானதுஅது அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டதுஅதை எப்படித் துவைப்பது. (எனக்கு இந்த கவலையே வேண்டாம் - துவைப்பதே இல்லையே!)

அதை பற்றி இங்கு பார்ப்போம்.
    ஒவ்வொரு ஆடையும் உள்ளும் அதனுடைய தயாரிக்கப்பட்ட இடமும்அதன் நூலின் வகைகளான பருத்தி (காட்டன்) அல்லது பாலியஸ்டர் இன்னபிற நூலின் வகைகளும் குறிக்கப்பட்டிருக்கும்.



    ஆடை தயாரிக்கப்பட்ட இடம் சீனா என்றால் அதன் விலை குறைவாகவும்எகிப்து போன்ற இடங்கள் தரமானைவையாகவும்விலை சற்று அதிகமாகவும் இருக்கும். கோடை காலங்களில் பருத்தி ஆடைகள் உடலுக்கு உகந்தவை.

உலகின் 'முதல்' பறவை இறந்தது...bye-bye birdie


பதிவு கொஞ்சம் போரடிக்கிற மாதிரி தோன்றும். முழுதும் படித்துப் பார்த்தால் வியப்பூட்டும் அறிவியல் உண்மைகளை அறிய முடியும்.

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

----------------------------------
இந்த பதிவிற்குள் செல்லும்முன் ஒருவர் புரிந்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்:

1. உயிரினப்படிமங்கள் (Fossils) - விலங்குகள் மற்றும் தாவரங்களின் இயற்கையாக பாதுகாக்கப்பட்ட மிச்சங்கள்/ஆதாரங்கள்.     

2. தொல்லுயிரியல் (Palaeontology) - உயிரினப்படிமங்கள் குறித்து பேசும் துறை (Study of Fossils).

3. தொல்லுயிரியலாளர் (Paleontologist) - உயிரினப்படிம ஆய்வுகளில் தனித்துவம் பெற்றவர்.
---------------------------------

                    அறிவியல் ஆய்விதழான Nature-ரின் செய்திகள் பிரிவு, சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட கட்டுரையின் தலைப்பு பரிணாம உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. அது,
Archaeopteryx no longer first bird - Matt Kaplan, Nature news, 27th July 2011.
இனி (உலகின்) முதல் பறவையல்ல அர்கீயாப்டெரிக்ஸ் - (Extract from the original quote of) Matt Kaplan, Nature news, 27th July 2011.


நீங்கள் மேலே பார்த்ததுக்கூட பரவாயில்லை. இந்த செய்தி வெளியான அடுத்த நாள் Nature இதழில் வெளியான இதுக்குறித்த மற்றொரு கட்டுரையின் தலைப்பு பலரை திக்குமுக்காட வைத்திருக்கும்.  
An icon knocked from its perch - Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.
ஒரு முக்கிய சின்னம் (அர்கீயாப்டெரிக்ஸ்) தன்னுடைய இருப்பிடத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டது - (extract from the original quote of) Lawrence M.Witmer, Nature, Vol 475, 28th July 2011, 458, doi:10.1038/nature10288.


சரி, ஏன் இந்த அர்கீயாப்டெரிக்ஸ் என்னும் உயிரினத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம்? 

யு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.


குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
Copyright © 2010 ITT Information. All rights reserved.